ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக குஜராத் வீரர் இஷாந்த் ஷர்மாவுக்கு 25 % அபராதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் 2025 நடத்தை விதிகளை மீறியதாக குஜராத் அணி வீரர்  இஷாந்த் ஷர்மாவுக்கு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.


ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், இஷாந்த் ஷர்மா நடத்தை விதிகளை மீறியதாக இந்தியன் பிரீமியர் லீக் குற்றம் சாட்டியுள்ளது. எனவே குஜராத் டைட்டன் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளி மற்றும் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இஷாந்த் சர்மா குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத்தின் தண்டனையை ஏற்றுக் கொண்டதாகவும் இந்தியன் பிரீமியர் லீக் அறிக்கை வெளியிட்டுள்ளது.





Night
Day